முக்கிய வீரர் விலகல் - தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு பின்னடைவு
முக்கிய வீரர் விலகல் - தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு பின்னடைவு
ஆஸ்திரேலியாவில் அடுத்த வாரம் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் பிரிட்டோரியஸ் விலகி உள்ளார். இடது கை கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் டி20 உலகக் கோப்பை மற்றும் இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகி உள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கூறி உள்ளது. முன்னதாக அந்த அணியின் பேட்டர் வான் டெர் டுசன் காயம் காரணமாக விலகிய நிலையில், பிரிட்டோரியஸும் தற்போது விலகி இருப்பது, தென் ஆப்பிரிக்காவிற்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
Next Story