கரும்புக்கான ஆதார விலை.. மத்திய அரசு வெளியிட்ட தகவல்
கரும்புக்கான ஆதார விலை 315 ஆக உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது...
மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர்கள் அனுராக்சிங் தாகூர் மற்றும் மன்சுக் மாண்டவியா ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்தனர். அதில், வரும் அக்டோபர் மாதம் முதல் 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை, கரும்புக்கான ஆதார விலையை 315 ரூபாயாக உயர்த்தியுள்ளதாக தெரிவித்தனர். சர்க்கரை ஆலை கரும்புக்கான உற்பத்தி விலை, 157 ரூபாயாக உள்ள நிலையில், ஆதார விலை 315 ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பது உற்பத்தி விலையை காட்டிலும் 100 புள்ளி 6 சதவீதம் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story