பெற்றோர் தன் பிறந்தநாளை கொண்டாட மறுத்ததால் மகன் தேடிக்கொண்ட விபரீதம் - விருதுநகரில் அதிர்ச்சி
விருதுநகரில் மகனின் பிறந்த நாளை கொண்டாட பெற்றோர் மறுத்ததால், கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு, மருத்துவமனை நடத்தி வரும் ஆனந்த்ராஜ் மகன் லோகேஷ், கிர்கிஸ்தான் நாட்டில் மருத்துவம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், விடுமுறைக்காக கடந்த ஜூன் மாதம் தமிழகம் வந்திருந்த லோகேஷ், தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால், மனமுடைந்த அவர், தூக்க மாத்திரையை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற நிலையில், பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Next Story