சாட்டையை சுழற்ற தயாரான காங்கிரஸ்.. நடுக்கத்தில் மூத்த தலைவர்கள் - "இனி எல்லாமே இப்படி தான்"
- சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு நடந்து வருகிறது.
- கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவராக தேர்வு செய்யப் பட்ட மல்லிகார்ஜுன கார்கேவுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களை தேர்வு செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டது.
- இரண்டாவது நாள் கூட்டத்தில் கட்சியின் அமைப்பு விதிகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
- அதில், காங்கிரஸ் உறுப்பினர்கள் போதைப் பொருட்களை உபயோகிக்கக்கூடாது.
- கட்சியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டங்களையும், கொள்கைகளையும் நேரடியாகவோ மறைமுகவோ பொதுவெளியில் மோசமாக விமர்சிக்கக்கூடாது எனவும் விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
- காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை 23-ல் இருந்து 35 ஆக உயர்த்த சட்டதிருத்தம் செய்யப் பட்டுள்ளது.
- காங்கிரஸ் முன்னாள் பிரதமர்கள், தேசிய தலைவர்களை நிரந்தர உறுப்பினராக நியமிக்கவும் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் செயற்குழுவில் நிரந்தர உறுப்பினர்களாக செயல்பட வழி வகுக்கப்பட்டுள்ளது.
- காங்கிரஸ் செயற்குழுவில் 50 %-த்தை பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் இதர பிற்படுத்தப் பட்டோர், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்க திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
- இவை தவிர காங்கிரசில் அனைத்து அமைப்புகளிலும் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், பெண்கள், சிறுபான்மை யினர் ஆகியோருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கவும் அமைப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
- மண்டலம் முதல் மாநிலம் வரையில் கட்சியின் அனைத்து மட்டத்திலும் 50 வயதிற்கும் குறைவானவர்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்கவும் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள் ளது.
- காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கையை டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளவும், ஆவணங்களை டிஜிட்டல் முறையில் மட்டுமே பராமரிக்கவும் கட்சி சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
Next Story