குடி பழக்கத்தால் மனைவியை பிரிந்த மகன்...கண்டித்த தந்தையை கொன்ற பயங்கரம்...

x

புதுக்கோட்டை - ஆலங்குடி

குடி பழக்கத்தால் மனைவியை பிரிந்த மகன்...

கண்டித்த தந்தையை கொன்ற பயங்கரம்...

தந்தையை அடித்து கொன்ற கொடூர மகன்...

குடி பழக்கத்தை கண்டித்தால் வெறிச்செயல்...

அப்பா, தன்னோட மகனுக்கு அறிவுரை சொல்றது வழக்கமா எல்லா குடும்பத்துலயும் நடக்குற ஒன்னு தான். ஆனா அதுவே இங்க ஒரு தந்தையோட உயிரை பறிச்சிருக்கு.

Pkg

கணவனை இழந்த அந்த இணையின் அழுகுரலில் அந்த ஊரே அலறி கிடந்தது.

ரத்தம் உறைந்து கிடந்த அந்த தலையணையும், பலிங்குகல்லில் காய்ந்து கிடக்கும் அந்த குறுதியும் தான் நடந்த கொடூரத்துக்கு சாட்சி.


ஆம்... நடந்திருப்பது ஒரு பயங்கரம் கொலை. பெற்ற தந்தையையே மகன் ஈவு இறக்கமின்றி அடித்து கொலை செய்திருக்கிறார்.

குடி பழக்கத்தால் மனைவியை பிரிந்த மகன்...

கண்டித்த தந்தையை கொன்ற பயங்கரம்...குடி பழக்கத்தால் மனைவியை பிரிந்த மகன்...

கண்டித்த தந்தையை கொன்ற பயங்கரம்...

கொல்லப்பட்டவர் சந்திரமோகன். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி சுண்ணாம்புக்காரத் தெருவைச் சேர்ந்தவர்.

சந்திரமோகனுக்கு வயது 55. கட்டிட வேலை செய்து வந்திருக்கிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர்.

பெற்ற தந்தையாக மகன்களுக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து முடித்திருக்கிறார் சந்திரமோகன். இரண்டு மகன்களுக்கும் ஊரே மெச்சும் அளவிற்கு திருமணத்தையும் நடந்தி முடித்திருக்கிறார்.

பிரீத்…

சந்திரமோகனின் முதல் மகனான சதீஷூக்கு திருமணம் நடந்து முடிந்து ஐந்து வருடங்கள் ஆகியிருக்கிறது. மூன்று வயதில் அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

மதுபழகத்துக்கு அடிமையான சதீஷ், வேலை வெட்டிக்கு செல்லாமல் சந்திரமோகனின் சம்பாதியத்திலேயே வாழ்ந்து வந்திருக்கிறார்.

இதனால் சதீஷூக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு வெடிப்பது வழக்கம். அப்படி எட்டு மாததுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினையில் சதீஷை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்றிருக்கிறார்.

இந்த சம்பவம் சதீஷை விட சந்திரமோகனை அதிகமாக பாதித்திருக்கிறது.

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து கெட்டிமேளம் கொட்டி ஊர் கூடி வாழ்த்தி நடந்த திருமணம் இப்படி பாதியிலேயே அறுந்துபோனதால் ஆத்திரமடைந்த சந்திரமோகன், சதீஷை பார்க்கும்போதெல்லாம் வார்தைகளால் வருத்தெடுத்திருக்கிறார். இதனால் தந்தை மகன் இருவருக்கும் அடிக்கடி தகராறு நடந்திருக்கிறது.

சதீஷால் மனமுடைந்து போன குடும்பத்தினர் அவரை நல்வழிப்படுத்த அடிக்கடி கோவில்களுக்கு சென்று பல பரிகார பூஜைகளை செய்து வந்திருக்கின்றனர்.

அப்படி தான் சம்பவம் நடந்த அன்று, மொத்த குடும்பமும் சந்திரமோகனையும் சதீஷையும் வீட்டில் விட்டுவிட்டு கோவிலுக்கு சென்றிருக்கிறார்கள்.

சதீஷ் வழக்கம் போல் மது குடித்துவிட்டு, சாயங்காலம் வீட்டுக்கு வந்திருக்கிறார். மகனின் கோலத்தை கண்ட சந்திரமோகன் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். சதீஷ் கோவத்தில் கொதித்து போயிருக்கிறார். தந்தை என்றும் பாராமல் திடீரென சந்திரமோகனை சரமாரியாக தாக்கிய சதீஷ் அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார்.

ஊருக்கு சென்ற குடும்பத்தினர் விடியற்காலையில் கதைவை திறந்து பார்த்ததும் சந்திரமோகன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்கள். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சந்திரமோகன் இறந்து போயிருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய சதீஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்