வயதான காலத்தில் கவனிக்க தவறிய மகன்.. 1 நொடியில் சொத்தை பறித்த சப் கலெக்டர் - குமரியில் தரமான சம்பவம்
முரசங்கோட்டைச் சேர்ந்த மரிய லூயிஸ் - அவரது மனைவி அசுந்தாமேரிக்கு குழந்தைகள் இல்லாததால், தனது அண்ணன் பிள்ளைகளை தங்களது குழந்தைளை போன்று கவனித்து வந்துள்ளனர். இந்த நிலையில், மரிய லூயிஸ் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டதால், தன்னையும், படுக்கையில் நோய்வாய்பட்டுள்ள மனைவியை கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன், அண்ணன் மகன், றைமண்ட்வியாலிஸ்க்கு, செட்டில்மெண்ட் பத்திரம் எழுதி கொடுத்துள்ளார். றைமண்ட்வியாலிஸ் அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்ற நிலையில், அவரது மனைவி, வயதான தம்பதிகளை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. தனது நிலத்தைப் பெற்றுக் கொண்டு தன்னையும் தன் மனைவியையும் கவனிக்க தவறிய அண்ணன் மகன் றைமன்ட்வியாலின்ஸ் மற்றும் அவரது மனைவி ஜோஸ்பின்ஐடா மீது, பெற்றோர் முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டத்தின் கீழ் தக்கலை சார்ஆட்சியரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் இருதரப்பையும் அழைத்து விசாரணை மேற்கொண்ட பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌசிக், றைமன்டுக்கு பதிவு செய்து கொடுத்த சொத்து பத்திரத்தை ரத்து செய்து மீண்டும் அதை மரிய லூயிஸ் பெயருக்கு மாற்றிட அதிரடியாக உத்தரவு பிறபித்து சான்றுதழ் வழங்கினார்.