கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த மகன்.. அடுக்கடுக்கான புகார்..உள்ளே என்ன நடந்தது..?

x

கோவை அரசு மருத்துவமனைக்கு டயாலிசிஸ் சிகிச்சைக்காக அனுமதித்த மகனை, மருத்துவர்களின் அலட்சியத்தினாலும், நிர்வாகத்தின் தவறான நடவடிக்கையாலும் பறிகொடுத்து நிற்பதாக தந்தை மனக்குமுறலை வெளிப்படுத்தியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...கோவை தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் 38 வயதான ராஜேஸ்குமார்... இவர், கடந்த ஐந்தாம் தேதி டயாலிசிஸ் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்... கிட்டதட்ட நீண்ட நாள் சிகிச்சைக்கு பின்பு மருத்துவமனையிலே ராஜேஸ்குமார் உயிரிழந்த நிலையில், மருத்துவமனை மீதும், மருத்துவமனை நிர்வாகம் மீதும் அவரின் தந்தை நாகேந்திரன் தொடுத்திருக்கும் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் 12 மணி நேரத்தில் மகனுக்கு மருத்துவர்கள் எந்தவொரு சிகிச்சையும் அளிக்கவில்லை என்றும், அதன் பின்பு வந்த மருத்துவர்கள் மகனுக்கு ஸ்கேன் எடுத்து சென்ற நிலையில், மூன்று நாட்கள் கழித்துதான் ஸ்கேன் ரிப்போர்ட்டை தந்ததாக கூறும் நாகேந்திரன், மகனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்ப்பதற்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் பணம் செலுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.....


Next Story

மேலும் செய்திகள்