"ஆசிரியர்களுக்கு எதிராக அரசு செயல்படுவதாக சிலர் விஷம பிரச்சாரம் செய்கிறார்கள்"-அமைச்சர் உதயநிதி

x

ஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில், ஐம்பெரும் விழா நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எதிராக அரசு செயல்படுவதாக சிலர் விஷம பிரச்சாரம் செய்வதாகவும், அது உண்மை அல்ல எனவும் கூறினார். மேலும், அமைச்சர் என்ற முறையில், ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக, முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்....


Next Story

மேலும் செய்திகள்