சுமார் 7,000 பட்டிமன்றங்கள்.. கல கல பேச்சு.. மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம் பிடித்த சாலமன் பாப்பையா
- 1936ல் மதுரை திருமங்கலத்திற்கு அருகே உள்ள சாத்தான்குடியில் ஒரு எளிய நெசவாளர் குடும்பத்தில் 9ஆவது மகனாக பிறந்தார்.
- தல்லாக்குளம் அமெரிக்கன் கல்லூரி பள்ளியில் 10 வகுப்பு முடித்த பின், அமெரிக்கன் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் இன்டெர்மீடியேட் படித்தார். பள்ளியில் படிக்கும் போதே பேச்சு போட்டி, நாடக போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வந்தார்.
- அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படித்த பின், மதுரை தியாகராஜர் கல்லூரியில் முதுகலை தமிழ் பயின்றார். பட்டம் பெற்ற பின், வேலூர் ஊரிஸ் கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்தார்.
- பின்னர் அமெரிக்கன் கல்லூரி யில் பணியாற்றினார்.
- எட்டையபுரம் பாரதி விழாவில் உரையாற்றிய பின், நாடு முழுவதும் உரை நிகழ்த்தி பெரும் புகழ் பெற்றார். குன்றகுடி அடிகளார் தலைமையில் பல அரங்குகளில் பேசியுள்ளார்.
- அமெரிக்கன் கல்லூரியின் தமிழ் துறை தலைவாரக பணியாற்றிக்கொண்டே ஏராளமான பட்டிமன்றங்களில் பங்கேற்று பெரும் புகழ்பெற்றார். ஓய்வுக்கு பிறகு தொடர்ந்து பட்டிமன்றங்களில் பேசிவந்தார்.
- இதுவரை சுமார் 7,000 பட்டிமன்றங்களில் பேசியுள்ள சாலமன் பாப்பையா அவற்றில் பெரும்பாலனவற்றில் நடுவராக இருந்துள்ளார்.
- ஒரு தொலைகாட்சி சேனலில், தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்கப் பாடல்களுக்கும் விளக்கம் அளித்து, அவற்றின் சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
- இயக்குனர் சங்கரின் முதல்வன், பாய்ஸ், சிவாஜி ஆகிய மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளார்.
- திருக்குறளுக்கும், புறநானுறு உள்ளிட்ட பல்வேறு சங்க இலக்கியங்களுக்கும் உரை எழுதியுள்ளார். பட்டுக்கோட்டை கல்யாண சுந்திரத்தின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார்.
- 2000ஆம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார். 2001ல் மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது.
- பட்டிமன்ற உரைகள் மூலம் தமிழ் மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற்றுள்ள சாலமன் பாப்பையா பிறந்த தினம், 1936, பிப்ரவரி 22.
Next Story