பூமியை தாக்கிய சக்திவாய்ந்த சூரிய புயல்.. உலகமே இருளில் மூழ்கும் அபாயம் - களத்தில் இறங்கிய இந்தியாவின் இஸ்ரோ..!
- சென்ற ஆண்டு பூமியின் மூலை முடுக்கெல்லாம் இணைய இணைப்பு சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் செயற்கைகோள்களை விண்வெளியில் செலுத்தி வரும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சூரிய புயலால் பாதிக்கப்பட்டதை மறக்கமுடியாது.
- சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் மஸ்கின் 40 செயற்கைக்கோள்கள் சூரிய புயலால் பாதிக்கப்பட்டு, தீக்கு இரையாகியிருந்தன.
- இம்முறையோ... சத்தமே இல்லாமல் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்திவாய்ந்த சூரிய புயல் பூமியை தாக்கி சென்றிருப்பது தான் விஞ்ஞானிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
- இது போன்ற சூரியப் புயல்கள் இனி அடிக்கடி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சென்ற ஆண்டே ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்திருந்தார்கள்.
- சூரியனில் இருந்து திடீரென வெளிப்படும் அதித ஆற்றல் கொண்ட சூரியக் காற்றை தான் சூரிய புயல் என்கிறோம்... இந்த புயலின் தாக்குதலால் செயற்கை கோள்கள் செயலிழப்பது... தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படும் ரேடியோ அலைகள் பாதிக்கப்படுவது...
- அதனால் தகவல் தொடர்புகளே முடங்கும். மின்சார இணைப்புகளையும் இந்த சூரியக் காற்று பாதிப்பதால் உலகமே இருளில் மூழ்கும் ஆபத்தும் உண்டு. பூமியில் மட்டுமல்லாது விண்வெளி செயல்பாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.
Next Story