அதிர்ச்சியின் உச்சம்..ஒரு பைக்கில் இத்தனை பேரா..? மாணவர்கள் செய்த பதறவைக்கும் சம்பவம்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் ஒரே பைக்கில் 5 மாணவர்கள் ஆபத்தை உணராமல் பள்ளிக்குச் செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன...
ஆட்டோவிலேயே 4 பேர் தான் பயணிப்பார்கள்... ஆனால் இங்கு இருசக்கர வாகனத்தில் ஒருவர் மடியில் ஒருவர் அமர்வதைப் போல் நெருக்கிப் பிடித்து அமர்ந்து கொண்டு போளூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக பயணித்து பள்ளிக்கு சென்றனர்...
18 வயது நிரம்பாத சிறார்கள் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம் என்று உயர்நீதிமன்றம் எச்சரித்தும் பெற்றோர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story