"சினேகன் மன்னிப்பு கேட்க வேண்டும்... இல்லையென்றால் மான நஷ்ட வழக்கு" - பாஜக நிர்வாகி ஜெயலட்சுமி
சினேகம் பவுண்டேஷன் தன்னுடைய பெயரில் தொடங்கப்பட்டது என மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகியும், பாடல் ஆசிரியருமான சினேகன் கூறி வரும் நிலையில் பாஜக நிர்வாகியும் நடிகையுமான ஜெயலட்சுமி தன்னுடைய அறக்கட்டளை அது என கூறி வருகிறார். இதுதொடர்பாக இருவரும் மாறி மாறி புகார் அளித்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் சட்டரீதியான கருத்துக்களை பெற்று, இருவரையும் சமாதானமாக செல்ல அறிவுறுத்தியதாக, ஜெயலட்சுமி தெரிவித்தார். அதேநேரம் சினேகன் தன்னை பற்றி பொதுவெளியில் அவதூறாக பேசியதால் அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிட்டால் மான நஷ்ட வழக்கு தொடர்வேன் என்றார்.
Next Story