விடுதியில் தங்கியிருந்த விஷப்பாம்பு -அறையைத் திறந்த பக்தர்களுக்கு அதிர்ச்சி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உள்ள தங்கும் விடுதியில் 3 அடி நீளமுள்ள விஷ பாம்பு இருந்தது. அறையை தூய்மை செய்ய வந்த பணியாளர்கள், அந்த விஷப் பாம்பைக் கண்டு பயந்து கோயில் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த கோயில் காவலர் ஒருவர், அறையில் பதுங்கி இருந்த பாம்பை ஆயுதத்தால் தாக்கி, விடுதி அருகே குழிதோண்டி புதைத்தார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்துள்ள பக்தர்கள், பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story