அடித்து நொறுக்கப்பட்ட வனத்துறை ஜீப் - நடுக்காட்டில் பரபரப்பு சம்பவம்
காட்டு யானையைப் பிடிக்க தாமதிப்பதாகக் கூறி கிராம மக்கள் வனத்துறையினரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டம் கடப்பா தாலுகாவில் காட்டு யானை தாக்கியதில் இளம் பெண் உட்பட இருவர் பலியாகினர்.
தொடர்ந்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் உடனடியாக காட்டு யானையை பிடிக்க 5 கும்கி யானைகள் களமிறக்கப்பட்டன.
4 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு நேற்று இரவு ஒரு காட்டு யானை பிடிபட்ட நிலையில், மேலும் ஒரு காட்டு யானையைப் பிடிக்க வனத்துறையினர் ஆர்வம் காட்டவில்லை என குற்றம் சாட்டி அப்பகுதி மக்கள் ஜீப்பை அடித்து கண்ணாடிகளை உடைத்து வனத்துறையினரை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story