பாஜகவினருக்கு எதிராக கோஷம்... கமலாலயத்தை முற்றுகையிட முயற்சி - சமூக ஆர்வலர் நந்தினியால் பரபரப்பு
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான நந்தினி மற்றும் அவரது சகோதரி நிரஞ்சனா ஆகியோர் இணைந்து, பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து சமூக வலைதளங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், பாஜகவினர் மிரட்டல் விடுப்பதாக கூறி, இருவரும் பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், கைது செய்தபோது இருவரும் பாஜகவினருக்கு எதிராக ஆவேசமாக கோஷம் எழுப்பியதால், அப்பகுதி பரபரப்பானது
Next Story