சில்லுனு க்ளைமெட்..! படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்... போக்குவரத்து நெரிசலில் கொடைக்கானல்

x

இன்றைய மாவட்ட ஸ்பெஷல் பகுதியில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நிலவும் போக்கு வரத்து நெரிசல் குறித்து அலசும் ஒரு தொகுப்பை காணலாம்...

ஓங்கி உயர்ந்த மரங்கள், பரந்து விரிந்த காடுகள், நீல வானம் என கொள்ளை அழகோடு காட்சி அளிக்கிறது மலைகளின் இளவரசியான கொடைக்கானல்....இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானல் அழகை ரசிக்கவும் குளு குளு சீசனை அனுபவிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏராளம்.

நெருக்கடியான வாழ்க்கை ஓட்டத்தில் நிம்மதி தேடி செல்பவர்களை, ஓட வைக்கிறது கொடைக்கானலின் போக்குவரத்து நெரிசல்.. ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரும்போது 15 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது

கொடைக்கானல் சுற்றுலா தளம் என்பதை தாண்டி, கேரட், உருளை, மலைப் பூண்டு, பீன்ஸ் விளையும் பூமி. இங்கிருந்து மதுரை, திருச்சி, திண்டுக்கல் நகரங்களுக்கு தினசரி காய்கறிகள் செல்கின்றன. கடந்த ஆண்டு மட்டும் கொடைக்கானலுக்கு ஒரு கோடி பேர் சுற்றலா வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானலுக்கு, வத்தலக்குண்டு மற்றும் பழனியிலிருந்து சாலை வழியாக செல்லலாம்..

இரு சாலைகளுமே கொடைக்கானல் பெருமாள்மலையில் சேர்ந்து பின்னர் ஒரே சாலையாகி விடுகிறது. சமீப ஆண்டுகளாக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில், குறுகலான சாலையில் நெருக்கடியில் சிக்கி சுற்றுலாப் பயணிகள் தவித்து வருகின்றனர்.

இதுபோக அங்கு போதிய பார்க்கிங் வசதியும் இல்லாததால் மக்கள் சுற்றுலா இடங்களை பார்க்காமலேயே விரக்தியில் திரும்பிவிடுகிறார்கள் எனவும் வேதனை தெரிவிக்கிறார்கள் உள்ளூர்வாசிகள்...

தயாபரன், கொடைக்கானல்

போக்குவரத்து நெரிசலை தடுக்க போதிய சாலை வசதியை அமைக்க கோரிக்கை விடுக்கும் சுற்றுலாவாசிகள்.. இன்பச்சுற்றுலா வருபவர்கலுக்கு, கொடைக்கானல் துன்பச்சுற்றுலா அனுபவத்தை தருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்....

மேலும், ஆங்கிலேயர் கால கொடைக்கானல் - கொச்சி சாலையை பயன்பாட்டுக்கு கொண்டுவரலாம் எனவும் கோரிக்கை விடுக்கிறார்கள். ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்த வனத்துறை இசைவு கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

ஓட்டல்கள், கடைகளில் பார்க்கிங் வசதியில்லை எனக் கூறுவோர், அரசு பார்க்கிங் வசதியை முதலில் அமைக்க வேண்டும் என்கிறார்கள

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பேசிய போது, மல்டிலெவல் கார் பார்க்கிங் அமைக்க மண் பரிசோதனை செய்யப்பட்டு கோப்புகள் அரசுக்கு அனுப்பி வைக்கப் பட்டிருப்பதாகவும், விரைவில் பணிகள் தொடங்க உள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

தமிழகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முயற்சிக்கும் அரசு, கொடைக்கானலில் போதிய சாலை, பார்க்கிங் வசதிகளை விரைந்து செய்துக் கொடுக்க வேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்