சிவந்தி ஆதித்தனார் நினைவு நாள் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மரியாதை

x

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் 10ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை போயஸ் தோட்ட நினைவு இல்லத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் முக்கிய பிரமுகர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர். மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர். சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, விஜிபி குழுமத் தலைவர் சந்தோஷம், நடிகர் வின்சென்ட் அசோகன் உள்ளிட்டோரும் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்