விளையாட்டு போட்டிகளுக்கு வழங்கப்பட்ட நிதியில் ரூ. 1.25 லட்சம் மோசடி செய்த பெண்... தீவிர விசாரணையில் லஞ்ச ஒழிப்பு போலீசார்
- சிவகங்கையில் ஒன்றேகால் லட்ச ரூபாய் கையாடல் செய்ததாக முன்னாள் மாவட்ட விளையாட்டு பெண் அலுவலர் மீது லஞ்ச ஒழிப்புபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 2019 ஆம் ஆண்டு சிவகங்கையில் மாவட்ட விளையாட்டு அலுவலராக பணிபுரிந்த கீதா என்பவர், தற்போது வேலூர் மாவட்டத்தில் கோகோ மற்றும் கபடி வீரர்களுக்கு பயிற்றுநராக பணிபுரிந்து வருகிறார்.
- அவர் சிவகங்கையில் பணிபுரிந்த காலத்தில் மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்த 8 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வழங்கியது.
- ஆனால் இப்போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட189 வீரர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி முகாம் நடத்தாமல், போலியாக ஆவணங்கள் தயாரித்து ஒன்றேகால் லட்ச ரூபாய் மோசடி செய்ததாக கீதா மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த ஜனவரி மாதம் வழக்கு பதிவு செய்தனர்.
- அவரிடம் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story