கண்மாயில் கிடந்த உடல்.. கிணற்றில் கிடைத்த தலை.. - சிவகங்கையை உலுக்கிய இளைஞரின் படுகொலை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நடந்த கொடூர படுகொலையில், இளைஞரின் தலையை மீட்ட போலீசார், கொலையாளிகள் 2 பேரை கைது செய்தனர்.
மானாமதுரை அருகே உள்ள செங்கோட்டை பகுதியை சேர்ந்த ராமு என்ற இளைஞரின் உடல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், கண்மாயில் இருந்து மீட்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட ராமுவின் உடலை போலீசார் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், ராமுவின் தலைப்பகுதி பள்ளமிட்டான் கிராமத்தில் உள்ள கிணற்றில் இருந்து தியணைப்புத் துறையினர் உதவியுடன் போலீசார் மீட்டனர்.
மேலும், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய வடக்கூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் மற்றும் பால முருகன் ஆகியோரை மானாமதுரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story