தமிழகமே திரும்பி பார்க்க வைத்த சகோதரிகள்.. இதுக்கு பேர் தான் சிஸ்டர்ஸ் கோல் - ஒரே வீட்டில் உருவாகிய 2 கலெக்டர்கள்..

x

தங்கை ஏற்கனவே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று சார் ஆட்சியராக உள்ள நிலையில், தற்போது அக்காவும் ஐஏஎஸ் தேர்வில் வென்று, ஒரே வீட்டில் 2 கலெக்டர்கள் உருவாகியுள்ளனர்... இவர்களின் சாதனை பயணம் குறித்து விளக்குகிறது இந்த சிறப்பு தொகுப்பு...

பள்ளிக் குழந்தைகளிடம் உங்கள் லட்சியம் என்ன என்று கேட்டால், அவர்களில் 90 சதவீதம் பேர் முதலில் சொல்வது "நான் கலெக்டர் ஆகணும்" என்பது தான்...

ஆட்சியராகி பிறந்த மாவட்டத்தை ஆள வேண்டும் என்பது தான் பெரும்பாலானோரின் கனவாக இருக்கும்...

ஆனால், அதை வெறும் வார்த்தைகளுக்கு மட்டும் சொல்லாமல், கனவுகளுக்கு உயிர் கொடுத்து ஒரே வீட்டில் 2 ஆட்சியர்கள் உருவாகி இருப்பது அவ்வளவு சாதாரணமா என்ன?...

கடலூர் மாவட்டம் மருங்கூர் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் தான் இந்த சுஷ்மிதா ராமநாதன்...

UPSC தேர்வில் அகில இந்திய அளவில் 528வது இடம் பிடித்து பிறந்த மண்ணிற்குப் பெருமை சேர்த்துள்ளார் சுஷ்மிதா...

அதற்கு முன்பே கடலூருக்குப் பெருமை தேடித் தந்தவர் இவர் தங்கை ஐஸ்வர்யா... ஆம், 2019ம் ஆண்டு நடைபெற்ற UPSC தேர்வில் தமிழக அளவில் 2ம் இடத்தையும், அகில இந்திய அளவில் 47வது இடத்தையும் பிடித்து, தற்போது சென்னை பொன்னேரி சார் ஆட்சியராக திறம்பட பணியாற்றி வருகிறார் ஐஸ்வர்யா...

தங்கையைப் பின்பற்றி தற்போது அக்காவும் ஐஏஎஸ் ஆகி அசத்தியுள்ளார்... அது சரி... முதலில் இந்தக் குறிக்கோளுக்கு அடித்தளம் போட்டது யார்? என்று நாம் கேட்ட கேள்விக்கு சுஷ்மிதா என்ன சொன்னார் தெரியுமா?...

சுஷ்மிதா ராமநாதன்

அம்மா, அப்பா மூலமாகத் தான் இந்த ஆர்வம் வந்தது"

"இதற்கு அடித்தளம் போட்டவர்கள் என் பெற்றோர் தான்"

"பெற்றோர் தொடர்ந்து துணை நின்றதால் தேர்வில் வெல்ல முடிந்தது"

மாவட்ட ஆட்சியராகி மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் எப்போது சுஷ்மிதா உங்கள் மனதில் ஆழமாக வேரோன்றியது என நாம் கேட்டோம்... அதற்கு அவர் கூறிய பதிலைக் கேட்கலாம்...

சுஷ்மிதா ராமநாதன்

"சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் படிக்க ஆரம்பித்தேன்"

"படிக்க ஆரம்பித்த பிறகுதான் இதன் முக்கியத்துவம் தெரிந்தது"

"மக்களுக்கு எப்படி சேவை செய்ய வேண்டும் என புரிந்தது"

"கஷ்டப்பட்டு படித்து தேர்வில் வெற்றி பெற்றேன்"

அல்லும் பகலும் படித்து கனவை நிறைவேற்றி விட்டீர்கள்... அதுபோக உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன என நாம் கேட்க, "பெண்களின் முன்னேற்றம் தான் ஒரே குறிக்கோள்" என தீப்பொறி போல் தெறித்தன அவர் வார்த்தைகள்...


Next Story

மேலும் செய்திகள்