அண்ணன் குடும்பத்துக்கு 'ஸ்கெட்ச்'... தாய்,குழந்தைகளை வீட்டிற்குள் வைத்து தீயிட்டு கொளுத்திய தங்கை
போச்சம்பள்ளி அடுத்த முதுகாம்பட்டி கிராமத்தில் வசிக்கும் கைலாசம் மற்றும் அவரது சகோதரி மகேஸ்வரி என்பவருக்கு இடையே, நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கைலாசம் வீட்டில் இல்லாத நேரத்தில், அவரது தோட்டத்திற்குள் அடியாட்களுடன் அத்துமீறி நுழைந்த மகேஸ்வரி, மாந்தோப்பில் இருந்த மாங்காய்களை பறித்துக் கொண்டு, டெம்போவில் ஏற்றிச் சென்றுள்ளார். அதனை தடுக்க முயன்ற கைலாசத்தின் மனைவி அமுதவல்லியை, மகேஸ்வரி அடியாட்களுடன் தாக்க முயன்றபோது, தனது 2 குழந்தைகளுடன் வீட்டிற்குள் சென்று லாக் செய்துள்ளார். அதனைப் பயன்படுத்திய மகேஸ்வரி, வீட்டின் வெளியே தாழிட்டு, வீட்டை தீயிட்டு சென்றதாக கூறப்படுகிறது. வீடு எரிவதைக் கண்டு பதறிய அமுதவல்லி, தனது குழந்தைகளுடன் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டுள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை முற்றிலும் அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.