இளம்பெண் தற்கொலை சம்பவத்தில் திடீர் திருப்பம்... போனில் போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி - 'நண்பனை கோர்த்துவிட்ட காதலன்'
- சீர்காழி அருகே கடந்த ஜனவரி மாதம் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திருப்பமாக நண்பனை சிக்க வைத்து தப்பிய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
- சீர்காழியை அடுத்த வைரவனிருப்பு பகுதியை சேர்ந்த இளம்பெண் சுகன்யா, கடந்த ஜனவரி மாதம் 4-ஆம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- உறவினர்களின் போராட்டத்துக்குப் பிறகு, பைனான்சியர் வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- இதற்கிடையே சுகன்யாவின் செல்போனை அவருடைய பெற்றோர் ஆய்வு செய்தபோது, தங்கள் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியது, அவருடைய காதலன் ஜான்டிரோட்ஸ் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
- இதையடுத்து, கொள்ளிடம் காவல் நிலையத்தில் அவர்கள் அளித்த புகாரின்பேரில் ஜான்டிரோட்ஸை போலீசார் கைது செய்தனர்.
- வினோத்திடம் வாங்கிய கடனை திருப்பி தரமுடியாததால், நண்பன் என்றும் பாராமல் அவர் மீது ஜான்டிரோட்ஸ் பழி சுமத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஜான்டிரோட்ஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story