“சார் சிகிச்சை அளிக்கணும்“... ஆறடி நீள கருநாக பாம்பை காட்டிய நபர் - மருத்துவமனையில் பரபரப்பு
- மயிலாடுதுற ை மாவட்டம் சீர்காழியில் காயமடைந்த கருநாக பாம்பை, சிகிச்சைக்கு எடுத்து வந்த பாம்பு பிடி வீரரால், கால்நடை மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
- வைத்தீஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்த கிருத்திகா என்பவரது வீட்டில் இருந்த ஆறடி நீள கருநாக பாம்பை, பாம்பு பிடி வீரர் பாண்டியன் பிடித்தார்.
- அப்போது பாம்புக்கு அடிபட்டிருந்ததை கண்ட பாண்டியன், சிகிச்சைக்காக சீர்காழியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து வந்தார்.
- இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், வனத்துறை அலுவலர் மேற்பார்வையில் பாம்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
Next Story