ஏழை மாணவியை வதைத்த 'கால் அழுகல்' நோய்... சென்னைக்கு அழைத்து உரிய சிகிச்சை -தந்தி டிவி செய்தி எதிரொலி
சீர்காழியில் கால் அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட 9ம் வகுப்பு மாணவி, தந்தி டிவி செய்தி எதிரொலியால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
சீர்காழியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி அபிநயா. இவருக்கு காலில் எஸ்.இ.எல் என்ற அரிய வகை நோய் ஏற்பட்டு உள்ளது. ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவி அபிநயா மருத்துவ செலவு செய்ய முடியாமல் போராடி வருவது தொடர்பான செய்தி தந்தி டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில், மாணவி அபிநயா, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததுடன், மாணவிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் வழங்க மருத்துவர்களுக்கு வலியுறுத்தி உள்ளார்.
--
Next Story