3000 சவரன் நகையை அபேஸ் செய்த பெண் - ஆசை பிளானில் சிக்கிய அப்பாவி மக்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில், 3 ஆயிரத்து 42 சவரன் தங்க நகைகளை மோசடி செய்த பெண்ணிடம் இருந்து நகைகளை மீட்டு தர புகார் அளிக்கப்பட்டுள்ளது.
x

மயிலாடுதுறை மாவட்டம், சீனிவாசபுரம் பகுதியில் பாத்திமா நாச்சியா என்ற பெண் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தியுள்ளார். சவரனுக்கு ஆயிரத்து 500 ரூபாய் தருவதாகவும் பின்னர் 15 நாள்களில் நகை திருப்பி தருவதாகவும் பாத்திமா நாச்சியா அறிவித்துள்ளார். இதையடுத்து, மஜிலா பானு என்பவர் 502 சவரன் நகையை, பாத்திமா நாச்சியாவிடம் கொடுத்துள்ளார். மேலும், சில பெண்களும் அவரிடம் நகையை கொடுத்துள்ளனர். சில மாதங்களுக்கு பின்னர், நகையை திருப்பி கொடுக்காத பாத்திமா நாச்சியா அந்த இடத்தை காலி செய்து சென்று விட்டார். இது குறித்து, மஜிலாபானு அளித்த புகாரின் பேரில், போலீசார் பாத்திமா நாச்சியாவை விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் தங்கள் நகையை மீட்டுத்தரக்கோரி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்