"ஐயா, உங்க கூட ஒரு போட்டோ எடுக்கணும் " நரிக்குறவ பெண்ணின் ஆசையை நிறைவேற்றிய அமைச்சர்
"ஐயா உங்கக் கூட ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கணும்" என்ற நரிக்குறவ பெண்ணின் கோரிக்கையை அமைச்சர் த.மோ. அன்பரசன் நிறைவேற்றி வைத்தார்.
காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில், நரிக்குறவர், குருவிக்காரர் இன மக்களுக்கு சாதி சான்றிதழ், நல வாரிய அட்டை, சுய உதவி குழுக்களுக்கு கடனுதவிக்கான காசோலை ஆகியவை ம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் தா.மோ. அன்பரசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது, நரிக்குறவர் பெண் ஒருவர் அய்யா, உங்க கூட ஒரே ஒரு போட்டோ எடுக்கணும் ". வேண்டுகோள் விடுத்தார். ஏற்கனவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் காண்பித்து சந்தோஷப்பட்டார். அதைத் தொடர்ந்து அமைச்சர் த.மோ. அன்பரசனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
Next Story