அமலாபால் குறித்த ரகசியம் உடைத்த பாடகர் பவ்நிந்தர் சிங்
"அமலாபாலுக்கு 2வது திருமணம் நடந்தது உறுதி"
நடிகை அமலாபாலுக்கு பவ்நிந்தர் சிங்குடன் திருமணம் நடந்தது உறுதியானது
திருமணம் நடந்ததற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பாடகர் பவ்நிந்தர் சிங்
7.11.2018ல் பஞ்சாப் மாநிலம் புஷ்கரில் உள்ள ராதிகா பேலஸில் திருமணம் நடந்ததாக ஆதாரத்துடன் மனு
ஆதாரத்தின் பேரில் பவ்நிந்தர் சிங்குக்கு நிபந்தனையற்ற ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
திருமணம் செய்து கொள்வதாக முடிவு செய்து பவ்நிந்தருடன் பழகியதாக அமலாபால் தெரிவித்திருந்தார்
நிச்சயதார்த்தம் மட்டுமே நடந்ததாகவும், திருமணம் செய்யவில்லை என்றும் கூறியிருந்தார் அமலாபால்
ஒன்றாக இருந்த புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டியதாகவும் பவ்நிந்தர் மீது அமலாபால் குற்றம்சாட்டியிருந்தார்
அமலாபால் புகாரின் அடிப்படையில் பவ்நிந்தர் மீது 16 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது
இயக்குநர் விஜயை கடந்த 2017ல் அமலாபால் விவாகரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது