"அரசின் வசம் சென்ற பட்டு சொசைட்டி நிர்வாகம்"... நெசவாளர்கள் அதிர்ச்சி

x

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பட்டு கூட்டுறவு சங்க சொசைட்டியில் பல்வேறு முறைகேடுகள் காரணமாக, தற்போது நிர்வாகக்குழு கலைக்கப்பட்டு, அரசே கைப்பற்றியதால் நெசவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கொசப்பாளையம் பகுதியில், பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி விற்பனை சங்கம் இயங்கி வந்தது. 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சியில், அதிமுக ஒன்றிய அவைத் தலைவர் சேவூர் சம்பத்,பூங்கா ரேஷன்கடை அமைப்பதற்கான இடத்தில், சங்க உறுப்பினர்

ஓருவருக்கும், சங்கத்தை சாராத மற்றொரு 2 நபர்கள் உட்பட 3 நபர்களுக்கும் ஒதுக்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக நெசவாளர்கள் அளித்த புகாரின்பேரில், பட்டு கூட்டுறவு சங்க இணை இயக்குநர் உத்தரவுப்படி, அதிமுகவை சேர்ந்த சேவூர் சம்பத் பதiவியை ரத்து செய்தும், நிர்வாக குழுவை கலைத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நிர்வாகம் அரசு வசமே சென்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்