சித்து மூஸ்வாலா கொலை விவகாரம் - "குற்றவாளியை கைது செய்தால் ரூ.2 கோடி" - தந்தை பல்கார் சிங்
பஞ்சாப்பை சேர்ந்த பிரபல பாடகர் சித்து மூஸ்வாலாவை கொலை செய்த நபரை கைது செய்வோருக்கு 2 கோடி ரூபாய் பரிசு அறிவிக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு அவரது தந்தை பல்கார்சிங் சித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
சித்து மூஸ்வாலாவின் கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த கோல்டி பிரார் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில்,கோல்டி பிராரை கைது செய்வோருக்கு இந்திய அரசு இரண்டு கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்க வேண்டும் என சித்துவின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசால் சன்மான தொகையை செலுத்த முடியவில்லை என்றால், அதனை தாமே செலுத்துவதாகவும் உறுதி அளித்துள்ளார்.
Next Story