கேள்வி கேட்ட நிருபரின் மைக்கை கோவமாக தள்ளிவிட்டு சென்ற சித்தராமையா
கர்நாடக முதலமைச்சராக தேர்வு செய்யப்படுபவர்கள் யார்? என, இன்றிரவோ அல்லது நாளையோ தெரிய வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை, காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா நேரில் சந்தித்து பேசினார். சுமார் அரைமணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் சில முக்கிய விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையா தனித்தனியாக மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து பேசினாலும், கட்சிக்குள் விரிசல் இல்லை என கூறப்படுகிறது. 18 ஆம் தேதி பதவி ஏற்பு விழா நடைபெற உள்ள நிலையில், அமைச்சர்கள் யார் யார் என்பது குறித்து பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்படுகின்றன. இந்த இரு சந்திப்புகளுக்கு முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story