"நோ பார்க்கிங்கில்" காரை நிறுத்தி சென்ற எஸ்.ஐ.. தட்டிக்கேட்ட நபரை... - வீடு புகுந்து சரமாரியாக தாக்கிய போலீஸ்

x

கோவையில் நோ பார்க்கிங்கில் காரை நிறுத்திய காவல் ஆய்வாளரை தட்டிக்கேட்டதால், கணவர் வீடு புகுந்து தாக்கப்பட்டதாக கூறி பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ளார்...

கோவை ஜி.வி ரெசிடென்சி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் காசி பாண்டியன். காவல் ஆய்வாளரான இவர், சம்பவத்தன்று குடியிருப்பின் நோ பார்க்கிங் பகுதியில் தனது காரை நிறுத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதை சுட்டிக்காட்டி அருகில் உள்ள குடியிருப்பில் வசித்து வரும் பார்த்திபன் என்பவர், குடியிருப்பு காவலாளியிடம் புகாரளித்துள்ளார். இது குறித்து காசிபாண்டியனிடம் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், காவல் ஆய்வாளரின் இந்த விதி மீறலை குடியிருப்பின் வாட்ஸ் அப் குழுவில் பார்த்திபன் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரத்தில் இருந்த காசிபாண்டியன், தனது குடும்பத்துடன் சேர்ந்து வீட்டில் தனியாக இருந்த பார்த்திபனை வீடு புகுந்து தாக்கியதாக தெரிகிறது. இதில், காயமடைந்த பார்த்திபன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது தொடர்பாக போலீசில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, அவரது மனைவி லட்சமி கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகாரளிக்க வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்