தங்கையை திருமணம் செய்ய துடித்த அண்ணன்... தட்டி கேட்ட வளர்ப்பு பெற்றோர் மீது துப்பாக்கிச் சூடு...

x

தத்தெடுத்து வளர்த்த அப்பா அம்மாவையே மகன் துப்பாக்கியால் சுட்டு கொல பண்ண பாத்து இருக்காரு. முறை தவறிய ஒரு தலை காதலால ஒரு குடும்பமே நிலகுலஞ்சி போயிருக்கு.

நள்ளிரவை உறங்கவிடாமல் ஒட்டுமொத்த காவல் துறையும் ஊருக்குள் இறங்கி தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கொண்டிருந்தனர்.

அன்று ஒலித்த துப்பாக்கி சத்தத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடையம் கிராமமே மரண பயத்தில் குலை நடுங்கி கிடந்தது.


தரையில் சிதறி கிடக்கும் ரத்த கரைகளுக்கும், சுவற்றில் பதிந்திருந்த தோட்ட தடையத்திற்கும் சாட்சியாக மருத்துவமனையில் உயிருக்கு போரடிக்கொண்டிருந்தன இரண்டு உயிர்கள்.

நடந்தது ஒரு கொலை முயற்சி...


உயிருக்கு போராடும் இவர்கள் கோவிந்தன்-கலையம்மாள் தம்பதி.

இதே ஊரை சேர்ந்தவர்கள். 40 வயதாகும் கோவிந்தனும் கலையம்மாளும் காப்பு காட்டில் விவசாய வேலை செய்து வருகிறார்கள். இந்த தம்பதிக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் தான் சம்பவம் நடந்த அன்று இப்படி துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள். துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கோவிந்தனையும் கலையம்மாளையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரனையை தொடங்கி இருக்கிறார்கள். அப்போது தான் நடந்த துப்பாக்கி சூட்டுக்கான காரணம் தெரிய வந்திருக்கிறது.

தம்பதியை துப்பாக்கியால் சுட்டது வேறு யாருமல்ல....இத்தனை நாட்களாக அவர்கள் பாராட்டி சீராட்டி வளர்த்த இவர்களது வளர்ப்பு மகன் பாரதி. வளர்த்த பிள்ளையே கல் நெஞ்சம் கொண்டு பெற்றோரை கொல்ல முயற்சிக்க காரணம்.... முறை தவறிய காதல்.

ஆம்.... 23 வயதான பாரதி சிறுவயதிலேயே தாயை இழந்தவர். தந்தையும் கண்டு கொள்ளாததால் கோவிந்தனும் கலையம்மாளும் தான் பாரதியை கண்ணுக்கு கண்ணாக வளர்த்து வந்திருக்கிறார்கள்.

தனது 3 பெண் பிள்ளைகளுக்கு பாரதி நல்ல அண்ணனாக இருப்பான் என்று நினைத்த கோவிந்தனுக்கு காத்திருந்தது பெரும் அதிர்ச்சி. தங்கையாக பார்க்க வேண்டிய கோவிந்தனின் மூத்த மகளை தாரமாக்க நினைத்து ஒரு தலையாக காதலித்து வந்திருக்கிறார் பாரதி.

அந்த பெண்ணிடம் பலமுறை காதலிக்குமாறு டார்ச்சர் செய்திருக்கிறார். இந்த விஷயம் கோவிந்தனுக்கு தெரியவர, இதெல்லாம் தவறு என பாரதியை கண்டித்திருக்கிறார். ஆனால் கோவிந்தன் கூறும் நல்லவைகளை பாரதியின் மனம் ஏற்கவில்லை.

இந்நிலையில் தான் சம்பவம் நடந்த அன்று நேராக கோவிந்தனிடமே சென்று உனது மகளை எனக்கு திருமணம் செய்து வை என பெண் கேட்டிருக்கிறார் பாரதி.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி இருக்கிறது. கோவிந்தனின் மறுப்புகள் பாரதிக்கு கொலை வெறியை தூண்டி உள்ளது.

அந்த வெறியோடு பன்றி வேட்டைக்கு பயன்படுத்தப்படும் நாட்டு துப்பாக்கியால் கோவிந்தனின் தலையில் சுட்டிருக்கிறார் பாரதி. இதனை தடுக்க வந்த கலையம்மாளையும் காலில் சுட்டு வீழ்த்தி இருக்கிறார்.

இருவரும் உயிருக்கு போரடிய நிலையில் பாரதி காப்பு காட்டிற்குள் தப்பி ஓடி இருக்கிறார். தலைமறைவாக இருந்த பாரதியை போலீசார் வலைவீசி தேடிபிடித்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்