பிறந்த குழந்தைகளுக்கான எய்ட்ஸ் பரிசோதனை கருவிகளுக்கு தட்டுப்பாடு..? | Babies | HIV kit
எய்ட்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட தாய்மார்களுக்கு பிறக்கும் பிறந்த குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்படும் எச்ஐவி பரிசோதனை கருவிகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டின் காரணமாக மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பரிசோதனைகள் நிறுத்தப்பட்டு இருப்பதோடு சில இடங்களில் பரிசோதனைகள் மிகவும் மந்தமாக நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. EID பரிசோதனை கருவிகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்கு விலக்கு பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தின் காரணமாகவே, இந்த பரிசோதனை கருவிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக NACO அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Next Story