"முன்னறிவிப்பின்றி இரவில் கடைகளுக்கு சீல்" - வியாபாரிகள் வேதனை
நீலகிரி மாவட்டம் உதகையில் கடைகளுக்கு சீல் வைக்கும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
உதகை நகராட்சி சந்தையில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், புதிய வாடகை முறையை நகராட்சி நிர்வாகம் அறிவித்து, அதன் படி வாடகையை செலுத்த வேண்டும் என தெரிவித்திருந்தது.
இருப்பினும், வாடகை நிலுவையில் உள்ள கடைகள், அதனை தவணை முறையில் செலுத்தி வரும் நிலையில், கடந்த இரண்டு தினங்களில் 50-க்கும் மேற்ப்பட்ட கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது, வியாபாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை, கண்டித்து வியாபாரிகள் விடிய, விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story