துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை தொடர் - முதலிடத்தில் சீனா இரண்டாம் இடத்தில் இந்தியா
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி 2ம் இடம் பிடித்தது. இந்த தொடரில் 1 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம் வென்ற இந்தியா, 7 பதக்கங்களுடன் 2ம் இடத்தை வசப்படுத்தியது. 8 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களுடன் சீனா முதலிடம் பிடித்த நிலையில், 3 பதக்கங்களுடன் ஜெர்மனி 3ம் இடம் பிடித்தது.
Next Story