இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி நியூஸ் - தக்காளி மட்டும் எதிரி இல்லை ! வந்தாச்சு அடுத்த ஷாக்

x

கோயம்பேடு காய்கறி சந்தைக்கு 2 ஆயிரம் மூட்டைகள் வரவேண்டிய பச்சை மிளகாய், வெறும் 700 மூட்டைகள் மட்டுமே வந்ததாலும்

தக்காளி நேற்று 80 முதல் 90 லாரிகள் வந்த நிலையில், இன்று 25 முதல் 30 லாரிகள் குறைவாக வந்ததால் விலை ஏறியுள்ளது.

அதேபோல், வரத்து குறைவாலும், நாளை முகூர்த்த தினம் என்பதாலும் இஞ்சி விலையும் ஏற்றம் கண்டுள்ளது...

கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி 120 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 100 ரூபாய்க்கும், இஞ்சி 270 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

உருளைக் கிழங்கு 18 ரூபாய்க்கும், பீட்ரூட் 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 120 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம், மாங்காய் 30 ரூபாய்க்கும், கத்தரி, வெண்டை, முருங்கை 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

பாகற்காய், அவரை, கேரட் 50 ரூபாய்க்கும், பீன்ஸ் 110 ரூபாய்க்கும், எலுமிச்சை 80 ரூபாய்க்கும், முள்ளங்கி 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது...

தக்காளி விலை சில்லறை விற்பனையில் அதிக விலைக்கு விற்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்