மனைவி - அண்ணி பிரச்சினையில் அண்ணனை கொன்ற தம்பி - கடலூரில் அதிர்ச்சி சம்பவம்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே, சொத்து பிரச்சினையில் நடந்த தகராறில், அண்ணனை இரும்புக் கம்பியால் தாக்கிக் கொன்ற தம்பியை, போலீசார் கைது செய்தனர்.குறிஞ்சிப்பாடி அடுத்த ஆயிப்பேட்டை கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்த ஆதிநாராயண மூர்த்திக்கும், அவரது தம்பி ஸ்ரீராமுக்கும் இடையே, நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஸ்ரீராம் மனைவி சித்ராவிற்கும், ஆதிநாரயண மூர்த்தியின் மனைவி மகேஸ்வரிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த ஸ்ரீராம், தனது அண்ணனை இரும்புக் கம்பியால் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மகேஸ்வரி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story