ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு காசு கேட்ட உரிமையாளரை அரிவாளால் வெட்டிய கும்பல் - அதிர்ச்சி காட்சிகள்
சாப்பிட்ட உணவிற்கு பணம் கேட்ட உணவக உரிமையாளர் உட்பட 3 பேரை, மர்ம கும்பல் அரிவாளால் தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சோழவரம் அடுத்த செம்புலிவரம் பகுதியை சேர்ந்த பாக்யராஜ் என்பவர் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு, பணம் கொடுக்காமல் செல்ல முயன்றுள்ளனர். உரிமையாளர் பணம் கேட்டபோது, கோபமடைந்த கும்பல், நாங்கள் யார் தெரியுமா? எனக்கூறி, உணவகத்தை அடித்து நொறுக்கியது. அதுமட்டுமல்லாமல் உணவக உரிமையாளர் பாக்கியராஜ் உள்ளிட்ட 3 பேரை அரிவாளால் தாக்கிவிட்டு, அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தப்பியோடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story