சாலையில் அறுந்து விழுந்து திடீரென தீப்பிடித்து எரிந்த மின் கம்பி - அதிர்ச்சி காட்சிகள்
கடலூர் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள தெருவில் மின் கம்பி அறுந்து விழுந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது... மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசிதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தகவலறிந்து வந்த மின்சாரத் துறை அதிகாரிகள் அப்பகுதியில் மின் இணைப்பை துண்டித்து மின் கம்பிகளை சரி செய்தனர். மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக ஆபத்தான வகையில் உள்ளதாக எத்தனையோ முறை புகாரளித்தும் சரி செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story