பார்சலை திறந்ததும் பேரதிர்ச்சி..கையில் எடுத்த சைபர் க்ரைம் போலீஸ்.புதிதாய் கிளம்பிய திருட்டு கும்பல்
புதுச்சேரியில் ஆன்லைன் மூலமாக தரமற்ற பொருட்களை அனுப்பி மோசடி செய்த நிறுவனத்தின் கணக்கை முடக்கம் செய்ய புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த மோதிலால் என்ற கல்லூரி மாணவர், ஆன்லைனில் வந்த விளம்பரத்தைக் கண்டு ஆயத்த ஆடைகளை ஆர்டர் செய்துள்ளார். பார்சல் வீட்டுக்கு வந்ததும், பணத்தை கொடுத்து விட்டு பார்சலை திறந்து பார்த்தபோது, அவர் ஆர்டர் செய்த ஆடைக்கும், வந்திருந்த ஆடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அந்த ஆடையை திருப்பிக் கொடுப்பதற்கு ஆன்லைன் நிறுவனத்தை பல முறை தொடர்பு கொண்டபோதிலும் அவர்கள் தொலைபேசியை எடுக்கவில்லை. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். இதையடுத்து அந்த நிறுவனத்தின் கணக்கை முடக்குவதற்கு சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.