"பணக்காரர்கள், கார்ப்பரேட்-களுக்கு ஷாக்..." - உச்சபட்ச வரி விதிக்க முடிவு - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
2023-24 பட்ஜெட்டை வியாழன் அன்று அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ஜோ பைடன் அனுப்ப உள்ளார். அதில் கார்ப்பரேட் வரி விகித்தை 21 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளார். பெரும் பணக்காரர்கள் மீது குறைந்தபட்சம் 25 சதவீத வருமான வரி விதிக்க கோரியுள்ளார். மூலதன லாப வரி விகிதத்தை 20 சதவீதத்தில் இருந்து 39.6 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 4 லட்சம் டாலருக்கும் அதிக வருவாய் கொண்டவர்கள் மீதான வருமான வரியை 37 சதவீதத்தில் இருந்து 39.6 சதவீதமாக உயர்த்தப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. .. இதற்கிடையே, பட்ஜெட் பற்றாகுறை அளவை குறைக்க, வரி விதிப்பை அதிகரிப்பதற்கு பதிலாக செலவுகளை குறைக்க வேண்டும் என்று எதிர்கட்சியான குடியரசு கட்சியினர் வலியுறுத்துகின்றனர். பிரதிநிதிகள் சபையில் குடியரசு கட்சியினர் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளதால், ஜோ பைடன் முன்மொழியும் வரி உயர்வுகளுக்கு நாடாளுமன்ற அங்கீகாரம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.