பெண்ணிடம் செயின் பறித்து தப்பியோடிய மர்ம நபர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி-பரபரப்பு சிசிடிவி காட்சி

x

கரூரில் பெண்ணிடம் மர்மநபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காந்திகிராமம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. சமையல் வேலை செய்து வரும் இவர், சம்பவத்தன்று வேலை முடித்து விட்டு தன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஹெல்மெட் அணிந்து கொண்டு ஒருவர் அவரின் கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டு சென்றார்.

அப்போது அங்கே ஏற்கனவே இருசக்கர வாகனத்தில் காத்திருந்த ஒரு நபருடன் அவர் அங்கிருந்து தப்பினார்.

விசாரணையில் அந்த பெண் அணிந்திருந்தது கவரிங் செயின் என உறுதியானது.

ஆனால் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களின் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்