மலையில் வீற்றிருக்கும் சிவன்! தரிசிக்க படையெடுக்கவுள்ள பக்தர்கள்.. தொடங்குகிறது கேதார்நாத் யாத்திரை
இந்துக்களின் 4 புனித ஸ்தலங்களான சார் தாமின் புனித யாத்திரை பயணம் வருகின்ற ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
ஆண்டுதோறும் 6 மாதங்களில் மட்டுமே பக்தர்கள் இந்த கோயில்களில் சென்று வழிபட முடியும். குளிர்காலத்தில் குகை கோயில் மூடப்பட்டு விடும். பத்ரிநாத் கோயில், கேதார்நாத் கோயில், கங்கோத்திரி மற்றும் யமுனோத்திரி ஆகிய நான்கு புனித ஸ்தலங்களில் ஏப்ரல் 22 ஆம் தேதி கங்கோத்திரி மற்றும் யமுனோத்திரி கோயில்களுக்கான யாத்திரை தொடங்குகிறது. ஏப்ரல் 25 ஆம் தேதி கேதார்நாத் யாத்திரை தொடங்கவுள்ள நிலையில், ஏப்ரல் 27 ஆம் தேதி பத்ரிநாத் கோயில் யாத்திரை தொடங்கவுள்ளது.
முன்னதாக கடந்த மார்ச் மாத நிலவரப்படி, இதுவரை 6 லட்சத்து 34 ஆயிரம் பக்தர்கள் புனித யாத்திரை பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
Next Story