"15 பேர்... தினமும் 20 மணி நேரம்..." - பெண் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

x

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற இடத்தில் கொடுமைப்படுத்துவதாக பெண் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், அவரை வேலைக்கு அனுப்பிய ஏஜெண்டுகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த புவனா என்பவர், ஏழு மாதங்களுக்கு முன் தனியார் ஏஜென்சி மூலம் துபாயில் வீட்டு வேலைக்காக சென்றார். அங்கு தினமும் 15 பேருக்கு, 20 மணி நேரம் வேலை செய்து வருவதாக கண்ணீருடன் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டார். சமூக வலைதளங்களில் வெளியான அந்த வீடியோவை வைத்து, தனது மனைவியை மீட்டுத் தருமாறு அவருடைய கணவர் ஜேம்ஸ், தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகார் தொடர்பாக, தண்டையாப்ரேட்டைபோலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர். தற்போது புவனா துபாயில் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ள போலீசார், அவரை வேலைக்கு அனுப்பிய வேப்பேரியில் உள்ள தனியார் ஏஜென்சியைச் சேர்ந்த ஜான், நவாஸ், அலாவுதீன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்தப் பெண்ணின் பாஸ்போர்ட்டை, அவர் பணிபுரியும் வீட்டின் உரிமையாளர் அளிக்காததால், அவரை சென்னைக்கு அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்