ஷேர் சேட்டில் பழக்கம்...காதலித்து ஏமாற்றிய ராணுவ வீரரின் திருமணத்தை நிறுத்திய காதலி
கன்னியாகுமரியில், காதலித்து ஏமாற்றிவிட்டு, வேறொரு பெண்ணுடன் நடைபெற இருந்த திருமணத்தை, பட்டதாரி பெண் தடுத்து நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.
தக்கலை அருகே சாரோடு பகுதியை சேர்ந்த சுபின் என்பவர், சென்னையில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும், மூலச்சல் பகுதியை சேர்ந்த ஜெனிஷா என்ற பட்டதாரி பெண்ணுக்கும் இடையே, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, சேர் சேட் மூலம் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.
இந்த நிலையில், திடீரென சுபின், ஜெனிஷாவுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
மேலும், சுபினுக்கும், வேறொரு பெண்ணுக்கும் இடையே திருமணம் நடைபெற இருந்த நிலையில், இதனை அறிந்த ஜெனிஷா, மணப்பெண்ணிடம், தான் காதலித்து ஏமாற்றப்பட்டதை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெனிஷா அளித்த புகாரின் பேரில், தலைமறைவாக உள்ள சுபினை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story