5 வருடம் முன்பு சொன்னது.. மறவாமல் இருக்கும் ரசிகர்கள்.. ஷாரூக் கானை தொடரும் ட்விட்டர் கேள்விகள்

x
  • வில்லத்தனமான கேரக்டரில் நடிக்க தொடங்கி , பின்னர் 90களின் காதல் நாயகனாக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார் நடிகர் ஷாரூக் கான்
  • அதன் பிறகு கமர்ஷியல் படங்களில் கொடிகட்டி பறந்த ஷாரூக்கை பாலிவுட்டின் பாட்ஷா என அழைக்க தொடங்கினார்கள் ரசிகர்கள். ரஜினியை போலவே, மை நேம் இஸ் கான் உள்ளிட்ட படங்கள் மூலம் பாலிவுட் படங்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வியாபாரத்தை பெரிதாக்கியவர் ஷாரூக்.
  • தான் மிகப்பெரிய ரஜினி ரசிகன் என்பதை படங்களில் காட்டிக்கொண்ட ஷாரூக்கிற்கு, தென் இந்தியாவில் மார்க்கெட்டை பெரிதாக்க அது உதவியது.
  • ஆனால் 2015ம் ஆண்டில் தொடங்கி தில்வாலே(DILWALE) , FAN , ரயீஸ் என தொடர்ச்சியாக ஃபிளாப் படங்களை கொடுத்தார். 2018ம் ஆண்டு வெளியான ZERO படமும் ஃபிளாப் ஆனதை தொடர்ந்து சில வருடங்கள் நடிப்பதையே நிறுத்திவிட்டார். இந்த இடைப்பட்ட காலத்தில் ஒரு பேட்டியில், அவரை பற்றி கூகுளில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்தார் ஷாரூக்.
  • அதில், ஷாரூக் கானிடம் பிரைவேட் ஜெட் உள்ளதா என்ற கேள்விக்கு, இப்போதைக்கு இல்ல, ஆனால் அடுத்த என் படம் எதாச்சு ஆயிரம் கோடி வசூல் செஞ்சா முதல் வேலை அதுதான் . என சிரித்துக்கொண்டே கூறினார்.
  • அவர் விளையாட்டாக கூறியிருக்கலாம், ஆனால் தற்போது நிஜமாகவே பதான் திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. எனவே, இந்த இடைப்பட்ட 4 ஆண்டு காலத்தில் ஷாரூக் சொந்த விமானம் வாங்கினாரா...இல்லையென்றால் வாங்கிவிட்டு ரசிகர்களுக்கு அறிவிக்காமல் இருக்கிறாரா என மீண்டும் ட்விட்டரில் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள் ரசிகர்கள்.

Next Story

மேலும் செய்திகள்