"பெண் போராட்டக்காரர்களை ஒடுக்க பாலியல் சித்ரவதை'' -ஈரான் சமூக ஆர்வலர் பரபரப்பு குற்றச்சாட்டு

x

ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண்கள் பாலின ரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தப்படுகின்றனர் என அதிரடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மனிதவுரிமைச் செயற்பாட்டாளரும் டிஎச்ஆர்சி மனிதவுரிமை அமைப்பின் பேச்சாளருமான நர்கீஸ் முகம்மதி, ஈரானில் உள்ள ஈவின் சிறையில் நீண்ட சிறைவாசத்தில் இருந்துவருகிறார். கடந்த செப்டம்பரில் மாஷா அமினி எனும் 22 வயது இளம்பெண் கலாச்சார போலீஸால் தாக்கி கொல்லப்பட்டதால், அந்த நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும் பரவிய போராட்டத்தைக் கட்டுப்படுத்த, முன்னணி போராட்டக்காரர்களை ஈரான் அரசு கடுமையாக ஒடுக்கியது. நூற்றுக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். போராட்டத்தின்போது காரில் தூக்கிச் செல்லப்பட்ட முன்னணி பெண் செயற்பாட்டாளர் ஒருவரை, ஈவின் சிறை அதிகாரிகள் பாலினரீதியில் சித்ரவதை செய்துள்ளனர் என்று முகம்மதி குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்