மாணவர்களிடம் பாலியல் தொல்லை - கட்டட தொழிலாளி மீது பாய்ந்த போக்சோ
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே 7ம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த நரேஷ்குமார், கட்டட வேலைகளை செய்து வந்தார். இந்நிலையில், 7ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்களுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின்பேரில் காவேரிப்பாக்கம் போலீசார், போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நரேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story