பாலியல் புகார் : மகளிர் குழு கூட்டமைப்பு திட்ட இணைப்பு அலுவலர் மகேஷ் குமார் பணியிடை நீக்கம்.
காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலக மகளிர் குழு கூட்டமைப்பு திட்ட இணைப்பு அலுவலர் மகேஷ் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மகளிர் கூட்டமைப்பு திட்ட இணைப்பு அலுவலராக பணிபுரிந்து வருபவர் மகேஷ்குமார். இவர் காரைக்கால் வட்டார மகளிர் கூட்டமைப்பு பெண் ஊழியர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் பட்டியலின பெண்களை வீட்டு பணிகளுக்கு ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பெண்கள் கூட்டமைப்பு பெண் ஊழியர் ஒருவர், மகேஷ் குமாரின் நடவடிக்கையால் தற்கொலைக்கு முயற்சி செய்து காரைக்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனவே, மகேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளிக்கப்பட்டது. இதனிடையே காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் நடைபெற்ற விசாரணை அடிப்படையில், திட்ட இணைப்பு அலுவலர் மகேஷ்குமார் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுவதாக புதுச்சேரி மாநில ஊரக வளர்ச்சி துறை திட்ட அதிகாரி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.