இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி... அகதிகளாக இந்தியா வரும் ஈழ தமிழர்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள தமிழர்கள் வாழ வழி இன்றி அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்தனர். அவர்களை மீட்ட கடலோரக் காவல்துறையினர் மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து இவர்கள் அகதிகள் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்கபட உள்ளனர். மேலும் இலங்கையில் இருந்து படகில் தமிழகத்திற்கு வர தங்கள் உடைமைகளை விற்று 1 லட்ச ரூபாய் இலங்கை ரூபாய் மதிப்பில் கொடுத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் அகதிகளாக 251 இலங்கை தமிழர்கள் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் இன்று மேலும் 3 பேர் வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story